தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யூ-ட்யூப் பார்த்து நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் தயாரித்த சாத்தான் பாய்ஸ் கைது! - யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் கைது

யூ-ட்யூப் பார்த்து துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைத் தயாரித்து வந்த பட்டதாரி இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் கைது
துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் கைது

By

Published : May 20, 2022, 8:07 PM IST

சேலம்: ஓமலூர் அருகேவுள்ள புளியம்பட்டியில் ஓமலூர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, சேலத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.

இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் ஒரு கை துப்பாக்கி, ஒரு பெரிய துப்பாக்கி, பாதி நிலையில் செய்த பெரிய துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தன.

உடனடியாக இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரதாப் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் தனியாக வீடு எடுத்து தங்கி, யூ-ட்யூப் சேனல் பார்த்து, அதன் மூலம் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அங்கிருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:கரண்ட் கட்டான நேரத்தில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை: நபர் கைது

ABOUT THE AUTHOR

...view details