தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் போக்சோவில் கைது! - இளைஞர் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இளைஞர் கைது
இளைஞர் கைது

By

Published : Jun 21, 2021, 5:35 PM IST

சேலம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

அன்னதானப்பட்டி உத்தரப்பன்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் (ஜூன்.19) பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமி வீட்டின் அருகே, முதியவர் வளர்க்கும் மாடுகளுக்கு கழனி தண்ணீர் ஊற்ற சென்றுள்ளார்.

அப்போது அந்த முதியவர் வீட்டில் இருக்கும் கார்த்திகேயன் (23) என்ற இளைஞர், சிறுமியை மாட்டுக் கொட்டகையில் இருந்து வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவத்தை பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே இது குறித்து சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், சிறுமியை கார்த்திகேயன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மெக்கானிக் கார்த்திகேயனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கார்த்திகேயன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: விரைவில் மூன்றாவது அலை- மாநிலங்களின் நிலை என்ன?

ABOUT THE AUTHOR

...view details