தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் அலுவலர்களை மிரட்டிய சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் - ஆட்சியர்..! - Investigation into intimidation of Yercaud Election Officer

சேலம்: மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அறைக்குள் ஏற்காடு எம்எல்ஏ சித்ரா தனது கணவருடன் சென்று அரசு அலுவலர்களை மிரட்டிய சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என்று சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

Yercaud Election Officer Threatening
Yercaud Election Officer Threatening

By

Published : Jan 4, 2020, 5:32 PM IST

சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. அதில், ஏற்காடு ஊராட்சி ஏழாவது, எட்டாவது வார்டு வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன.

இது தொடர்பாக திமுக, அதிமுக கட்சியினர் மத்தியில் சர்ச்சை நிலவி வந்தது. இதனால், ஊராட்சி ஒன்றிய வளாகத்தை சுற்றி ஏராளமான திமுக, அதிமுகவினர் குழுவாக இருந்தனர். அப்போது, மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அறைக்குள் ஏற்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சித்ரா தனது கணவருடன் உள்ளே நுழைந்து அலுவலர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், விதிமுறைகளை மீறி எம்எல்ஏ சித்ரா மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அறைக்குள் நுழைந்தது குறித்து சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தேர்தல் அலுவலர்களை மிரட்டும் எம்.எல்.ஏ

அதற்கு பதிலளித்த அவர் 'அதுதொடர்பாக விசாரிக்கிறோம். அதன்பிறகு முடிவு செய்கிறோம் 'என்றார்.

இதையும் படிங்க:

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி: மாநிலத் தேர்தல் ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details