தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏற்காடு கோடை விழா; ஏற்பாடுகள் தீவிரம் ! - மலர்க் கண்காட்சி

சேலம்: ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் 31ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

ஏற்காடு

By

Published : May 27, 2019, 11:55 PM IST

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி வெளியிட்ட அறிக்கையில்,

"சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் 44 ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் 31ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 2ம் தேதி வரை நடக்கிறது.

ஏற்காடு அண்ணா பூங்காவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி நடக்க உள்ளது. மேலும் காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சியும் நடக்க இருக்கிறது. கோடை விழாவில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணி விளக்க முகாம் நடத்தப்பட உள்ளது.

கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி , பாரம்பரிய உணவு போட்டி , மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப் போட்டி , சுற்றுலா துறையின் சார்பில் படகு போட்டிகள் ஆகியவை நடத்தப்பட உள்ளன.

ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி!

சுற்றுலாத்துறை மற்றும் கலை பண்பாட்டுத் துறை ஆகியவற்றின் சார்பில் பல்வேறு வண்ணமிகு கலை நிகழ்வுகளும் கோடை விழாவில் நடத்தப்பட உள்ளது. கோடை விழா மலர் காட்சி பள்ளி குழந்தைகள் பார்த்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details