ஆண்டுதோறும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று சேலத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் கொண்டாடப்பட்டது.
சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்! - சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்
சேலம்: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்!
இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி சிறுவர், சிறுமியர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இதனையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க...தந்திரங்கள் சூழ்ந்த சமகால அரசியல்!