சேலம் மாநகர் திருமணிமுத்தாறு கரையோரம் காய்கறி வியாபாரம் செய்வதற்கு மாநகராட்சி சார்பில் குத்தகை விடப்பட்டு, அதனடிப்படையில் கட்டணம் செலுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
அதன்படி, திருமணிமுத்தாறு ஆற்றங்கரையோரம் காய்கறி வியாபாரம் செய்வதற்கு உரிய குத்தகையை இளங்கோ என்பவருக்கு வழங்கிவுள்ளது. அவர் ஆற்றங்கரையோரம் காய்கறி கடை நடத்த வேண்டுமென்றால் ஒரு கடைக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்டு காய்கறி வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் என்று புகார் எழுந்தது.
இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம், காய்கறி வியாபாரம் செய்யும் பெண்கள் பலமுறை புகார் கொடுத்தும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை என்பதால், இன்று (செப்.04) நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலையில் காய்கறிகளைக் கொட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், " பல ஆண்டுகளாக திருமணிமுத்தாறு ஆற்றங்கரையோரம் பெண்கள் சாலையோர கடைகள் வைத்து காய்கறி, பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.