சேலம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் காக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (31). இவரது கணவர் நாகராஜர். இந்த தம்பதிக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து ஜெயலட்சுமி வசித்து வந்தார். இதனிடையே ஜெயலட்சுமி எருமாபாளையத்தைச் சேர்ந்த தமிழழகனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த இருவரும் அம்மாபேட்டை பூவாத்தாள் தெருவில் வசித்து வந்தனர்.
இதனிடையே, ஜெயலட்சுமியின் மூத்த மகள் மாதத் தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்தது காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் நேற்று (அக்.11) தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி குக்கர் மூடியால் கணவரைத் தாக்கி உள்ளார்.