சேலம்:எடப்பாடி அரசு மருத்துவமனை முன்பு சாலையின் நடுவில் பெண் ஒருவர் சாமியாடியதால் பரபரப்பு நிலவியது. தற்போது அந்தப் பெண் சாமியாடிய காணொலி வைரலாகியுள்ளது.
எடப்பாடி நகராட்சிக்குள்பட்ட கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தாயி. இவர் காவல் நிலையம், அரசு மருத்துவமனை உள்ள பகுதிகளில் சாலையின் நடுவே நின்று சாமியாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
காவல் நிலையம் சென்று வேறொரு விவகாரம் தொடர்பாகப் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததாலும், அரசு மருத்துவமனைக்குச் சென்றால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததாலும், தான் சாமியாடியதாக அப்பெண் கூறியுள்ளார்.