இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள வாக்கு மையங்களுக்கு 1169 சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கும் நிகழ்வு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்றது. அதன் பின் மாவட்ட ஆட்சியர் ரோகினி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,
"வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் நூறு விழுக்காடு வாக்களிக்கும் தேர்தலாக இருக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ,சேலம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செய்து வருகிறது.
இந்த நிலையில் வாக்கு மையங்களுக்கு வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அந்தந்த வாக்கு மையங்களுக்கு, அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதனால் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் சிரமமின்றி எளிதாக வாக்குமையத்தில் வந்து வாக்களித்து செல்ல முடியும். மேலும் சேலம் மாவட்டத்தில் அமைதியாக தேர்தல் நடக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் 1169 வாக்கு மையங்களுக்கு சக்கர நாற்காலி அனுப்பிவைப்பு
.