சேலம்:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், திமுகவைச் சேர்ந்த பர்கூர் ஒன்றியக் குழு தலைவர் கவிதா கோவிந்தராஜ், காரைக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், திமுகவைச் சேர்ந்த பர்கூர் ஒன்றியக் குழு தலைவர் கவிதா கோவிந்தராஜ், காரைக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளருமான கோவிந்தராஜ், பர்கூர் ஒன்றியக் குழு கவுன்சிலர்கள் சென்னப்பன், ஐயப்பன், சகுந்தலா ரகுநாதன், லட்சுமி குமார், ராஜேஸ்வரி சோமசுந்தரம், லட்சுமி அண்ணாமலை, கோவிந்தன் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
இதையும் படிங்க: கேராளவின் ஓபிஎஸ் நிர்வாகிகள் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்!
மேலும், ஒப்பதவாடி ஊராட்சி வார்டு உறுப்பினர் நந்தகுமார், மல்லபாடி கிளைச் செயலாளர் பழனி, ஊத்தங்கரை ஒன்றியம் வெள்ளக்குட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி விஜயன், ஊத்தங்கரை ஒன்றிய துணைச் செயலாளர் கே.சிவக்குமார் ஆகியோர் திமுகவில் இருந்து விலகி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, புதிதாக அதிமுகவில் இணைந்தவர்களுக்கு ஈபிஎஸ், அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார், ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிஎம்.தமிழ்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு விரைவாக முடிவெடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்!