சேலத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
விழாவில் ஆட்சியர் சி.அ.ராமன் பேசும்போது, 'முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு பெறப்பட்ட 56ஆயிரத்து 267மனுக்களில் 26ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற மனுக்கள் தகுதி இல்லாத காரணத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை' என்றார்.
முதலமைச்சரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்ந்து பேசிய அவர், 'சேலத்தில் யாரெல்லாம் வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார்களோ அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டாகள் வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்து 612 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், 188 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 42 பயனாளிகளுக்கு சமூக நலத்துறையின் சார்பில் இலவச தையல்இயந்திரம் என மொத்தம் ஆயிரத்து 842 பயனாளிகளுக்கு ரூ.2.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும்' அவர் கூறினார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் விருதுநகரில் முப்பெரும் விழா: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு!