தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் குழாய் உடைப்பு! நீரூற்று போல் ஓடும் நீர் - pype damage

சேலம்: மேட்டூர் - சேலம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நீரூற்று போல் பெருக்கெடுத்து ஓடியது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குடிநீர் குழாயில் உடைப்பு நீருற்று போல் பெருகெடுத்து ஓடிய அவலம்

By

Published : Jun 23, 2019, 10:40 AM IST

சேலம் பள்ளப்பட்டி அருகே உள்ளது சத்திரம் பேருந்து நிலையம். இங்கு இன்று அதிகாலை சேலம் - மேட்டூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நீரூற்று போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே சேலம் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

குடிநீர் குழாயில் உடைப்பு நீருற்று போல் பெருகெடுத்து ஓடிய அவலம்

குடிநீர் குழாய் உடைந்து 8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மாநகராட்சி அலுவலர்கள் சரி செய்ய வராததால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாக்கடையில் கலந்தது. மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு மக்களை வாட்டிவதைத்து வரும் நிலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் சரி செய்யாதது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய பொதுமக்கள் மாநகராட்சி அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details