தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எனது ஓட்டு, எனது உரிமை' - சேலம் மாணவிகளின் விழிப்புணர்வு

சேலம்: அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, கல்லூரி மாணவிகள் 'எனது ஓட்டு, எனது உரிமை' என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

தேர்தல் செய்திகள்
100 விழுகாடு வாக்களிக்க வேண்டுமென மாணவர்களுக்கு விழிப்புணர்வு

By

Published : Mar 11, 2021, 5:35 PM IST

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பில், அனைவரும் தவறாமல் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் பொன்னம்மாப்பேட்டையிலுள்ள தனியார் கல்லூரியில், 'எனது ஓட்டு, எனது உரிமை' என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளுக்கான கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

'எனது ஓட்டு, எனது உரிமை' - வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதில், மாணவிகள் சிலர் தங்கள் கைகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மெஹந்தி வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். போட்டியில் சிறப்பாக பங்கேற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர், பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? டிடிவி பதில்

ABOUT THE AUTHOR

...view details