சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வ.உ.சி மார்க்கெட் வணிக வளாகத்தை புதியதாக கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதியதாக அமையவுள்ள மார்க்கெட்டில் ஏற்கனவே கடைகள் வைத்து வணிகம் நடத்திவரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்பட கடையின் பரப்பளவை அமைத்து கட்டித் தரவேண்டும் என்றும் வ.உ.சி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் செயல் தலைவர் சண்முகவேல், சங்கத்திலுள்ள 128 உறுப்பினர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்ட மூன்று பேரை பொறுப்பிலிருந்து நீக்கியிருப்பதாகவும், அவர்களுடன் குத்தகைதாரர்கள், மாநகராட்சி அலுவலர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.