சேலம் கன்னங்குறிச்சி அருகேயுள்ள கோகுல் நகர் பகுதியில் பத்திரப்பதிவு அலுவலர் சந்தானம் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று குடும்பத்துடன் தனது உறவினரின் இறப்பு சடங்கிற்காக அருர் சென்று, இன்று பிற்பகல் வீடு திரும்பியபோது பின் பக்கக்கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகை, லேப்டாப் மற்றும் 12 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அருகிலுள்ள கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்த பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.