சேலம் மாவட்டம், சேலம் வனக்கோட்டத்தில் உள்ள ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் மயில், வெள்ளை மயில், புள்ளி மான், கடமான், குரங்கு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் சென்னை வண்டலூர் வன உயிரியல் பூங்காவிலிருந்து 9 நீர்ப் பறவைகள் சேலம் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கூழைக்கடா என்றழைக்கப்படும் பறவை மூன்று, சாம்பல் நிற நாரை எனப்படும் பறவை முன்று, பூநாரை எனப்படும் பறவை மூன்று என மொத்தம் 9 நீர்ப் பறவைகள் சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார். மேலும், பொதுமக்களின் பார்வைக்காக அப்பறவைகளின் இருப்பிடத்தில் விடப்பட்டுள்ளது.