சேலம்:இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று (ஜன.26) சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவர் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் வந்தபோது, திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வைரல் வீடியோ: தொண்டரை தாக்கிய அமைச்சர் நேரு - trending video
சேலம் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வரவேற்பு நிகழ்ச்சியில், தொண்டர் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் கே.என். நேருவின் வீடியோ வைரலாகி வருகிறது.
தொண்டரை தாக்கும் அமைச்சர் நேருவின் வைரல் வீடியோ!
இந்த நிகழ்வில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டார். அப்போது தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று, சால்வை அணிவித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் கே.என்.நேரு தொண்டரை தாக்கியது மட்டுமல்லாமல், அவரை தள்ளிவிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:'சேர் எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?' திமுக நிர்வாகி மீது கல் வீசிய அமைச்சர் நாசர்!