தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இணையவழி கல்விக்கு இணையாக குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் கிராமத்து இளைஞர்கள் - குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் கிராமத்து இளைஞர்கள்

சேலம்: விடுமுறை நாட்களிலும் பாதுக்காப்பு வழிமுறைகளைக் கடைபிடித்து, இணையவழி கல்விக்கு இணையாக, கிராமத்து குழந்தைகளின் கல்வி தடைபடாமல் இருக்க இளைஞர்கள் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

teach
teach

By

Published : Nov 24, 2020, 6:18 PM IST

சேலம் அமரகுந்தி அடுத்துள்ள உப்பாரப்பட்டி கிராமத்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அப்பகுதி, சிகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு இலவச டியூஷன், உடற்கல்வி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் கிராமத்து இளைஞர்கள்

நோய் தொற்று ஏற்படும் சவாலான இந்தசூழ்நிலையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கிராமத்து மக்களின் துணையோடு, ஊர் நிர்வாகிகள் ஒத்துழைப்புடன், தங்கள் அலுவல் பணிகளை விட்டு மாணவர்களில் கல்விக்கு இளைஞர்கள் உதவி வருகின்றனர்.

இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் பொதுமக்கள்

சுமார் 10 மாணவர்களைக் கொண்டு தொடங்கிய இவ்வகுப்புகள், இன்று 70 மாணவர்களை கொண்டு நடைப்பெற்று வருகிறது. காலையும் மாலையும் உடற்பயிற்சி, புதிய முறையில் கல்வி என்று தினமும் மாணவர்களின் உடல்நலமும் பேணப்படுகிறது. தங்கள் பிள்ளைகளின் கல்வியில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும், முன்னேற்றம் ஏற்படுவதாக பெற்றோர் பெருமிதம் கொள்கிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details