கரோனா வைரஸ் தொற்று பொதுமக்களிடையே பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்து அமல்படுத்தியுள்ளன. சேலம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரோனோ வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் ஊராட்சி நிர்வாகங்கள் சார்பிலும் தொடர்ந்து முகக்கவசங்கள், கிருமி நாசினி மருந்து மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவை வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேக்கம்பட்டியில் ஊராட்சி பிரதிநிதிகள் சார்பில் கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள் கிராம தூய்மைப் பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டன. மேலும் ஊராட்சி பிரதிநிதிகள் செலவில் தேக்கம்பட்டி கிராமம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் கரோனோ வைரஸ் தடுப்பு குறித்து ஊராட்சி பிரதிநிதிகள் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.