தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜிலென்ஸ் திடீர் ரெய்டு; ரூ. 85 ஆயிரம் பணம் சிக்கியது!

சேலம்: பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச பணம் ரூ. 85 ஆயிரம் சிக்கியது. 10 புரோக்கர்கள் 5 அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

85 ஆயிரம் ரூபாய்

By

Published : Jul 17, 2019, 12:13 AM IST

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணத்தில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் 34 கிராமங்களை சேர்ந்தவர்கள் நிலங்களை பத்திரப்பதிவு செய்து வந்தனர். இதனால், இங்கு அதிகமாக உலவும் புரோக்கர்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்ளுக்கு லஞ்சப் பணம் வாங்கி தருவதாக சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலர்களுக்கு புகார் கிடைத்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் திடீரென அயோத்தியாபட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பத்திரப்பதிவு அலுவலகம்

பின்னர் கதவுகளை அடைத்துக்கொண்டு விசாரணை செய்தனர். அப்பொழுது அலுவகத்தில் இருந்து டேபிள்களிலும், நோட்டு, புத்தகங்களிலும், பீரோக்களிலும் கத்தை கத்தையாக லஞ்சப்பணம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மறைத்து வைக்கப்பட்ட லஞ்சப்பணம் ரூ. 85 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இந்தப் பணம் எப்படி வந்தது என சார் பதிவாளர் மற்றும் அங்கு பணியாற்றி வரும் நான்கு அலுவலர்களிடமும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details