சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து, சேலம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் எ.வ.வேலு பேசுகையில்,
- அடிக்கடி தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் நான்கு முறை கேள்வி எழுப்பப்பட்டும் தமிழ்நாடு விவசாயிகளின் கடன்களை ஏன் ரத்து செய்யவில்லை?
- அதானி உள்ளிட்ட பிரதமர் மோடி கூட்டாளி நிறுவனங்களின் கடன்களை 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கும் மேல் தள்ளுபடி செய்த பாஜக அரசுக்கு ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளிக்கிறார்?
- நீட் தேர்வை கொண்டுவந்த பாஜக அரசை அவர்கள் ஏன் மீண்டும் கொண்டுவர நினைக்கிறார்கள்? என அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மேலும் அவர், "தமிழர்களின் நலன் மீது அக்கறை இல்லாமல் எடப்பாடி அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரியை கொண்டுவரக் கூடாது என கருணாநிதியும், ஜெயலலிதாவும் நினைத்தனர். அவர்கள் இருக்கும்வரை ஜிஎஸ்டி வரி தமிழ்நாட்டில் வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டு ஜிஎஸ்டி வரியை தமிழ்நாட்டில் நுழையவிட்டுள்ளது.