17ஆவது மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியின் மூலம் பாஜக தனிப்பெரும்பான்மை வாய்ந்த கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 38 இடங்களை திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. தாமரை மலர்ந்தே தீரும் என்ற வார்த்தை புஷ்வானமாக போனது.
திமுகவின் அதிரடி வெற்றி; விசிகவினர் கொண்டாட்டம்!
சேலம்: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளை திமுக கூட்டணி கட்சியினர் கைப்பற்றியதை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
விசிகவினர்
38 மக்களவைத் தொகுதிகளை திமுக கைப்பற்றிய வெற்றியை கொண்டாடும் விதமாக சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.