சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி தாலுக்காவின் நடுப்பட்டி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக ரங்கநாதன் என்பவரும், கிராம உதவியாளராக ராஜா என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் கூட்டுச் சேர்ந்து அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்துள்ளன.
15 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது! - கிராம நிர்வாக அலுவலர் கைது
சேலம்: காடையாம்பட்டி தாலுக்காவில் சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சமாக வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற விவசாயி, ஒன்றியத்தில் ஒப்பந்தப் பணிகள் செய்வதற்காக தனக்குச் சொத்து மதிப்பு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தை ஆய்வு செய்த கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதன், சொத்து மதிப்பீடு சான்றிதழ் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி மணி, இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை மணியிடம் கொடுத்தனுப்பினர். இதனையடுத்து, இரவு எட்டு மணிக்கு மணியை வீட்டிற்கு வரவழைத்து, ரங்கநாதன் லஞ்சம் பெற முயன்றபோது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் அவரை கையும் களவுமாகக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள கிராம உதவியாளர் ராஜாவை தேடி வருகின்றனர்.