சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சேலம் ஐயன் திருமாளிகையில் உள்ள நேசக்கரங்கள் சிறுமியர்கள் இல்லத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜேந்திரன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு இனிப்புடன் கூடிய காலை உணவை வழங்கினார்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு! - உதயநிதிஸ்டாலின்
சேலம்: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சேலத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
stalin
முன்னதாக நேசக்கரங்கள் ஆதரவற்ற இல்லத்தில் உள்ள குழந்தைகள் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடினர். நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், இளைஞர் அணி அமைப்பாளர் அறிவழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.