சேலம் மாவட்டம் காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் வசிக்கும் ராஜா மகன் கவிபாலா (25), அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பிரகாஷ் (27) ஆகிய இருவரும் வீட்டு விலங்குகளை வைத்து டிக் டாக் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுவந்தனர்.
டிக்டாக்கில் வனவிலங்குகளைப் பயன்படுத்தி காணொலி பதிவிட, இருவரும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குச் சென்று சட்டவிரோதமாக டிக்டாக் செய்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து பொதுமக்கள் டேனிஸ்பேட்டை வனச்சரக அலுவலத்திற்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.