சேலம்: சென்னை - கோவை இடையே சேலம் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 26ஆம் தேதி, வந்தே பாரத் ரயிலில் சென்னை கீழ்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பவுலேஷ் (வயது 70), அவரது மனைவி ரோஸ் மார்க்ரேட் ஆகியோர் சி3 பெட்டியில் ஈரோட்டிற்கு பயணித்தனர்.
இந்நிலையில் மாலை 6.05 மணிக்கு சேலத்திற்கு வந்த, வந்தே பாரத் ரயில், 4வது பிளாட்பாரத்தில் நின்றது. அப்போது தனது இருக்கையில் இருந்து எழுந்த பவுலேஷ், ரயிலின் அவசரக் கதவு அருகே வந்து நின்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அவசரக் கதவு திறக்கவும், மறுபுறத்தில் இருந்த 5வது பிளாட்பாரத்தின் தண்டவாளத்தில் பவுலேஷ் தவறி விழுந்தார்.
சுமார் 6 அடி உயரத்திற்கு மேல் இருந்து விழுந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, பவுலேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவசர கதவின் பட்டனை யாரும் அழுத்தி திறக்காத நிலையில், அது எப்படி திறந்து பவுலேஷ் கீழே விழுந்தார் என ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, நேரடியாக சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விசாரித்தார். பின்னர் அவர், நேரடியாக கோவைக்கு புறப்பட்டுச் சென்று, விபத்து நிகழ்ந்த வந்தே பாரத் ரயிலின் சி3 பெட்டியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், சேலம் ரயில்வே ஸ்டேஷன் 4வது பிளாட்பாரத்தில் வந்தே பாரத் ரயில் வந்து நின்றது.