சேலம் மாவட்டம் முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்காக பல்வேறு சலுகைகள் ஏற்படுத்தப்பட்டு பிரசவ காலத்தின் போது முறையான சிகிச்சைகள் அளிக்க சுகாதாரத் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சேலம் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருத்திகா என்ற 8 மாத கர்ப்பிணி பெண் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை மோசமானதால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோன்று செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கௌசிகா என்ற மூன்று மாத கர்ப்பிணி பெண் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.