சேலம் மாவட்டம் மேட்டூர் - சேலம் மெயின் ரோட்டில், மேச்சேரியில் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. இதில் வங்கி சார்பில் ரூ. 20 லட்சம் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த கொள்ளையர் அதனை திருட செல்ல இன்று (ஜூன் 5) அதிகாலை வந்தார். கொள்ளையர் கடப்பாறை கொண்டு ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருக்கும்போது மையத்தில் உள்ள அபாய சங்கு ஒலித்தது.
இச்சத்தம் கேட்டு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த சாலை போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர். மேலும் ஏ.டி.எம்., மைய சிசிடிவி கேமராவில் இரண்டு இளைஞர்கள் முகக் கவசம் அணிந்து இயந்திரத்தை உடைப்பது பதிவாகியுள்ளது.