சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியில், சங்கர் என்பவர் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் எனக் கூறி அப்பகுதியில் உள்ள அடுமனை (பேக்கரி), உணவகம், மளிகைக்கடை வியாபாரிகளிடம் தீபாவளி வசூலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலி உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சங்கரை கையும் களவுமாகப் பிடித்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேந்திரன் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.