சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகில் உள்ள ராக்கியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகன் சந்தோஷ் (வயது 12). இவர், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். அதேபோல், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பொன்னையாறு பகுதியைச் சேர்ந்த செந்திலின் மகன் தியானிஷ் (வயது 12), சேலம் மரவனேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளிகள் செயல்படாத நிலையில் தியானிஷ், ராக்கியம்பட்டியில் உள்ள தனது பாட்டி செல்லம்மாளின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், சந்தோஷ், தியானிஷ் இருவரும் இணைந்து மோரிவளவு பகுதியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத வகையில் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்த இருவரும் நீரில் மூழ்கினர்.