கேரள மாநிலம் காயங்குளத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த காயங்குளம் போலீசார் கொலையில் தொடர்புடைய ஒருவரை கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய அஜ்மல் மற்றும் சாகில் ஆகியோரை தேடிவந்தனர்.
கேரளாவில் கொலை செய்துவிட்டு தமிழ்நாடு வந்த 2 இளைஞர்கள் கைது ! - கொலை செய்துவிட்டு தமிழகம் தப்பி வந்த 2 வாலிபர்கள் கைது
சேலம் : கேரள மாநிலத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தப்பிச் சென்ற இருவரின் செல்போன் சிக்னலை வைத்து இருவரும் எங்கு உள்ளனர் என கேரள போலீசார் கண்காணித்து வந்த நிலையில் அவர்கள் கேரளாவிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் பயணிப்பது தெரிய வந்தது.
உடனடியாக கேரள காவல் துறையினர் பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம் போலீசாருக்கு கொலையாளிகள் ரயிலில் தப்பி வருவது பற்றி தெரிவித்தனர். விரைந்து செயற்பட்ட சேலம் காவல் துறையினர் கொலையாளிகள் இருவரையும் சேலம் ஜங்சன் காவல் நிலையத்தில் கைதுசெய்து கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கேரள போலீசார் கொலையாளிகள் இருவரையும் அழைத்துச் சென்றனர்.