தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மக்களின் உணர்வுகளை முதலமைச்சர் மதிப்பதில்லை..!' - டிடிவி தினகரன் - எட்டு வழி சாலை

சேலம்: "தேர்தல் முடிந்ததும் எட்டு வழிச் சாலை கட்டாயமாக அமைக்கப்படும் என்று கூறியதன் மூலம் மக்களின் உணர்வுகளுக்கு சிறிது கூட முதலமைச்சர் மதிப்பதில்லை என்று தெரிகிறது" என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

டிடிவி தினகரன்

By

Published : Jul 16, 2019, 10:32 PM IST

சேலத்தில் அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நீட் தேர்வில் தமிழ்நாட்டில் விதிவிலக்கு பெற்று தராமல், மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு இணக்கமாக இருக்கிறோம் என்று கூறிக் கொள்வதால் என்ன பயன் வந்துவிடப்போகிறது.

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உட்பட ஐந்து மாவட்ட விவசாயிகள் பாதிக்கும் வகையில் எட்டு வழி சாலை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியபோது, மேடையில் அமைதியாக இருந்துவிட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்போம் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தல் முடிந்ததும் கட்டாயமாக எட்டு வழி சாலை அமைக்கப்படும் என்று கூறுகிறார். எங்கே அவர் மக்களின் உணர்வுகளை மதித்தார்? என கேள்வியெழுப்பிள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,"மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. விபரீத ராஜ யோகம் என்றுதான் கூற வேண்டும். அவர்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் பாஜகவுடன் பேசி துணை சபாநாயகர் பதவி வாங்கலாம் என்றுதான் திமுகவினர் நினைப்பார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் அதிமுகவிற்கு இருக்கும் தோல்வி பயம்தான் காரணம். அடுத்ததாக பருவ மழை, புயல் வந்துவிடும் என்று காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலை தள்ளி போட்டு கொண்டு அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் சென்று விடுவார்கள்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details