திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் ஏழு பேர் கொண்ட கும்பலுடன் கடந்த 6ஆம் தேதி ராஜசேகரின் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக அவரை வெட்டியுள்ளனர். இதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இதில் தொடர்புடைய கலைச்செல்வன், கோபால், மேசக் பிரபு ஆகிய மூன்று பேரும் வியாழக்கிழமை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவா முன்னிலையில் சரணடைந்தனர்.