அண்ணல் அம்பேத்கரின் 64ஆவது நினைவு நாளையொட்டி, சேலம் மாநகரில் தொங்கும் பூங்கா அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் சக்திவேல் தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சேலத்தில் சட்டமேதை சிலைக்கு மரியாதை - சேலத்தில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
சேலம்: அண்ணல் அம்பேத்கரின் 64ஆவது நினைவு நாளையொட்டி, அவரின் திருவுருவச் சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
அதேபோல சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம், இந்திய குடியரசுக் கட்சி சார்பிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.