சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இங்கு பிரகதி, ரம்யா, நிரஞ்சனா ஆகிய மூன்று திருநங்கைகள் தங்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கொலை மிரட்டல் : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்! - சேலம் மாவட்ட செய்திகள்
சேலம்: கொலை மிரட்டல் விடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தற்கொலைக்கு முயற்சி செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை மீட்ட காவல் துறையினர், வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு எதிராக உள்ள பிற திருநங்கைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளப்பட்டி காவல் நிலையத்தில், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், ரம்யா, பிரகதி, நிரஞ்சனா ஆகிய மூன்று திருநங்கைகள், கிச்சிப்பாளையம் பகுதியிலுள்ள ரவுடிகள் துணையுடன் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் உதவி ஆணையாளர், திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் வழங்கியதையடுத்து அவர்கள் கலைந்துச் சென்றனர்.