உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு அறிவியல் பாடத்தை எளிமையாக நடத்த பயிற்சி! - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு அறிவியல் பாடத்தை எளிமையாக நடத்த பயிற்சி
சேலம்: ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு அறிவியல் பாடத்தை எளிமையாக நடத்த பயிற்சி மற்றும் பணிமனை நடைபெற்று வருகிறது.

உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு அறிவியல் பாடத்தை எளிமையாக நடத்த பயிற்சி
அறிவியல் பாடத்தை எளிமையாக மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பங்கள் வழியாக பயன்படுத்தும் பயிற்சி மற்றும் பணிமனை நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சியில், உருவகப்படுத்துதல், திரைப்பதிவு, இணையவழி மதிப்பீடு செய்தல், இயங்குஉரு படங்கள் (animation) தயாரித்தல் இணையத்தில் உள்ள இலவச வளங்களைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துதல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறன.
இந்நிகழ்வை நிறுவன முதலவர் மு. செல்வம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சேலம், தலைவாசல், சங்ககிரி, பனமரத்துப்பட்டி, கொங்கனாபுரம், கொளத்தூர், நங்கவள்ளி, மேச்சேரி ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் 40 பேர் பங்கேற்றனர்.