தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டுவருகிறது. சேலம் பகுதியில் வீடுகளிலும், பொது இடங்களிலும் மண் பானையில் பொங்கலிட்டு மக்கள் கொண்டாடினர்.
சேலம் இரும்பு உருக்காலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் இரும்பு ஆலை வாயிலில் சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினர். சமத்துவ பொங்கல் விழாவில் தொழிற்சாலையில் பணிபுரியும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பொங்கலிட்டு, தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்தகளை பரிமாறிக்கொண்டனர்.
இதே போன்று கணபதி நகரில் நடைபெற்ற சமத்துவ பொங்கலில் பெண்கள், ஆண்கள் அனைவரும் உரி அடித்தல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளை ஆடி மகிழ்ந்து பொங்கலை கொண்டாடினர்.
பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம் எம்டிஎஸ் நகரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். அதன் பின் எஸ்.ஆர் பார்த்திபன் உரியடி நிகழ்வில் கலந்து கொண்டு பானையை உடைத்தனர்.
இதையும் படிங்க:வெளிநாட்டினருடன் 'பொங்கலோ பொங்கல்' - கலக்கிய குமரி மக்கள்