சேலம்: பழைய பேருந்து நிலையத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் பூ , பழம், வாழை இலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் 200-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிறார்.
அதாவது, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையம், அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை ஆகியவற்றை திறப்பதற்காக ஸ்டாலின் வருகை புரிகிறார். மேலும், மே 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன வசதிக்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி பூ மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி, இன்று காலை முதலே மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி வாகனங்களைக் கொண்டு கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட கடை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், "கரோனா காலத்தில் புதிய பூ மார்க்கெட் கட்டும் காரணத்தால், அந்த இடத்தை காலி செய்து தற்போது இப்பகுதியில் வியாபாரம் நடத்தி வருகின்றோம். தற்போது இது தற்காலிக மார்க்கெட் தான், புதிய மார்கெட் பணிகள் இன்னும் 10 சதவீதம் தான் பாக்கியுள்ளது. அது முடிந்தவுடன் நாங்களே காலி செய்ய தயாராக உள்ளோம்.