கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மார்ச் 16ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை பொது நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தக் கூடாது என்றும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், சேலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமண நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் கடன் பெற்று தொழில் செய்துவரும் புகைப்படக் கலைஞர்கள், தாங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்த தனியார் நிதி நிறுவனங்கள் இரண்டு மாதம் கால அவகாச நீட்டிப்பு செய்து தரக்கோரி சேலம் மாவட்ட புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஆட்சியரிடம் மனு கொடுத்த புகைப்படக் கலைஞர்கள் இதேபோல், சுற்றுலா வாகனத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள் வாகன காப்பீடு வங்கியில் பெற்றுள்ள வாகன கடனை திரும்ப செலுத்துவதற்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கக் கோரி சேலம் மாவட்ட டிராவல்ஸ் ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஆட்சியரிடம் மனு கொடுத்த வாகன ஓட்டுநர்கள் இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை