தமிழ்நாடு

tamil nadu

ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட சென்ற சுற்றுலாப் பயணிகளை தடுத்து நிறுத்திய காவல் துறை!

சேலம்: புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகளை, மலை அடிவாரத்திலிருந்த சோதனைச் சாவடியில் காவல் துறையினர், தடுத்து நிறுத்தினர்.

By

Published : Jan 2, 2021, 7:23 AM IST

Published : Jan 2, 2021, 7:23 AM IST

வாகன ஓட்டிகளை தடுத்தி நிறுத்திய காவல் துறை
வாகன ஓட்டிகளை தடுத்தி நிறுத்திய காவல் துறை

தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கேளிக்கை விடுதிகள், மனமகிழ் மன்றங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்தது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஏற்காட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களான அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட ஏற்காடு சுற்றுலாத் தலங்கள் சென்ற டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முதல் நாளை (ஜனவரி 2 ) மாலை வரை மூடப்பட்டது.

வாகன ஓட்டிகளை தடுத்தி நிறுத்திய காவல் துறை

இந்நிலையில், புத்தாண்டையொட்டி கார்கள், இருசக்கர வாகனங்களில் ஏற்காடு செல்ல வந்த சுற்றுலாப் பயணிகளை மலை அடிவாரத்திலுள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால், ஏற்காடு பகுதியிலுள்ள சுற்றுலாத் தலங்கள் பயணிகளின்றி வெறிச்சோடியது.

இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம்: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details