சேலம்:உள்நாட்டு வணிகத்தை சீரழித்து அந்நிய வணிகத்தை தழைக்க மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன என்று சேலத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் 40ஆவது ஆண்டு வணிகர் தின விழா நடைபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட வணிகர் சங்க பிரதிநிதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் தா. வெள்ளையன் கலந்து கொண்டு வணிகர் தின விழா குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், வரும் மே 5ஆம் தேதி வணிகர் தின மாநாடு செங்கல்பட்டு அடுத்த அச்சரப்பாக்கத்தில் நடைபெறும்.