சேலத்தில் இன்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர் ஒன்றிப்பின் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில், ஒன்றிப்பின் மாநில தலைவர் சுரேஷ் பாபு தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் 20 அம்ச கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கூறுகையில், "தமிழ்நாடு அளவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், அதற்கு இணையான பணியிடங்களில் அமைச்சுப் பணியாளர்களுக்கும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் விகிதாச்சாரம் தொடர்பாக, முன்னாள் போக்குவரத்து ஆணையர் சி.பி. சிங் அனுப்பிய முன்மொழிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும்.
அரசுக்கு சிறந்த வருவாய் ஆதாரமாக இருக்கும் சோதனைச் சாவடிகளை, தற்போதுள்ள நடைமுறைகளின்படி தொடரவும், புதிய சோதனைச் சாவடிகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
ஒன்றிப்பின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நூறு விழுக்காடு கணினிமயமாக்கப்பட்டு அதிவேக இணையதள வசதியை உருவாக்கித் தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சங்கப் பிரதிநிதிகளை அழைத்து தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க... விபத்தில் கை முறிந்தவருக்கு ரூ. 26.85 லட்சம் இழப்பீடு MTC-க்கு உத்தரவு