ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான யுனெஸ்கோ 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக அறிவித்தது. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறப்பு மற்றும் மறைவு தினம் ஏப்ரல் 23ஆம் தேதி என்பதால் அன்றைய தினம் உலகப் புத்தக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று உலகம் முழுவதும் புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
சேலத்தில் புத்தகக் கண்காட்சி
சேலம்: உலக புத்தக தினத்தை ஒட்டி சேலத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
இந்நிலையில், சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உலக புத்தக தினத்தை ஒட்டி மாபெரும் புத்தகக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்த புத்தகக் கண்காட்சியில் அக்னிக் குஞ்சு, அவன் வருவானா, நிலாச் சோறு, கலியுகம், வருங்காலத்தைச் செதுக்குங்கள், வனவாசம், சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், சிங்காரி பார்த்த சென்னை, முத்துக்குளியல் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்து மகிழ்ந்தனர்.