தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடத்தப்பட்ட திமுக கிளைச் செயலாளர் நாகராஜ் வீடு திரும்பினார் - KIDNAP

சேலம்: நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட திமுக கிளைச் செயலாளர் நாகராஜ் இன்று அவரது வீட்டிற்கு வந்தடைந்தார்.

கடத்தப்பட்ட திமுக கிளைச் செயலாளர் நாகராஜ் வீடு திரும்பினார்

By

Published : May 14, 2019, 8:55 PM IST

சேலம் மாவட்டம் சிவதாபுரம் அடுத்துள்ள பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். திமுக கிளைச் செயலாளரான இவர் மீது ஏலச்சீட்டு பண மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகராஜ் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தீடீரென காரில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், நாகராஜனை வழி மறித்து காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். நாகராஜ் உடன் வந்த நண்பர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க, இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் நாகராஜின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில், கடத்தப்பட்ட நாகராஜ் தனது வீட்டில் இருப்பதாக இன்று காலைகாவல்துறைக்கு வந்த தகவலையடுத்து நாகராஜை சூரமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து கடத்தல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனார். இந்த விசாரணையில் நாகராஜ், நேற்று முன்தினம் அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் தன்னை காரில் கடத்திச் சென்று ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வைத்து தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தன்னிடம் பணம் ஏதும் இல்லை என அறிந்த அவர்கள் தன்னை அங்கேயே சாலையோரம் விட்டு விட்டு சென்றதாகவும், பின்னர் பேருந்து மூலம் வேலூர் வழியாக சேலத்திற்கு வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், நாகராஜின் வாக்குமூலத்தில் காவல் துறையினருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இந்த கடத்தல் சம்பவம் பணத்திற்காக நடைபெற்றதா அல்லது கடன் கொடுத்தவர்களை அச்சுறுத்த இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனரா என பல்வேறு கோணங்களில் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் நாகராஜிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்தப்பட்ட திமுக கிளைச் செயலாளர் நாகராஜ் வீடு திரும்பினார்

ABOUT THE AUTHOR

...view details