சேலம்மாவட்டத்தில் நேற்று (பி.15) தேசிய குடற்புழு நீக்க வாரம் கடைபிடிக்கப்பட்டது. அதனை ஒட்டி சேலம் தொங்கும் பூங்கா மாநகராட்சி அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அதன்பிறகு , சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கட்டண சிகிச்சை பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் உள்ளது போல் சேலம், மதுரை, கோவை அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை பிரிவு துவங்கப்படும் என 2022ல் அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலத்தில் தற்போது 10 கட்டண படுக்கைகள் வசதி கொண்ட சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளதாகவும், இதில் தனியார் மருத்துவமனையை விட கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.