தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, மே மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவையில் நாளையும், நாளை மறுநாளும் பரப்புரை செய்யவுள்ளார்.
அதன் பின்னர், பரப்புரையை முடித்துவிட்டு வரும் ஜனவரி 24ஆம் தேதி இரவு சேலம் நெடுஞ்சாலை நகர் முகாம் அலுவலகம் திரும்புகிறார். தொடர்ந்து, ஜனவரி 25ஆம் தேதி காலை எடப்பாடி அடுத்த, கோனேரிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கிறார்.
காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர்! - edapadi palanisamy to visit salem
சேலம்: ஓம்சக்தி காளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
குடமுழுக்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு கார் மூலம் புறப்பட்டு கள்ளக்குறிச்சி செல்கிறார் என்று முதலமைச்சர் முகாம் அலுவலக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.