சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பல்வேறு மாவட்டங்களில் தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பரப்புரை மேற்கொள்கிறார். பரப்புரை பயணத்தை முடித்துவிட்டு சேலம் வரும் முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
அதைத்தொடர்ந்து ஓமலூரிலுள்ள கட்சி அலுவலகம் செல்லும் முதலமைச்சர், அதிமுக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசிக்க உள்ளார்.