தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘விவசாயிகளை அச்சுறுத்தும் எண்ணம் இல்லை’ - முதலமைச்சர் திட்டவட்டம் - edappadi

சேலம்: சேலத்திலிருந்து சென்னை வரை அமைக்கப்படவுள்ள எக்ஸ்பிரஸ் சாலைக்காக விவசாயிகளை வற்புறுத்தியோ, அச்சுறுத்தியோ நிலத்தைப் பெறும் எண்ணம் தமிழக அரசுக்கு கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

edappadi

By

Published : Jul 22, 2019, 4:07 PM IST

சேலத்தை அடுத்த ஓமலூரில் உள்ள அதிமுக சேலம் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது முதலமைச்சர் கூறுகையில், நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வாகன போக்குவரத்தைவிட தற்போது 300 மடங்கு வாகனங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் அதே சாலையைத்தான் பயன்படுத்தி வருகிறோம். எனவே புதிய சாலைகள் உலகத்தரத்தில் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

சேலத்திலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்காக விவசாயிகளை அச்சுறுத்தியோ, வற்புறுத்தியோ நிலத்தைப் பெறும் எண்ணம் தமிழக அரசுக்கு கிடையாது. நாங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் இல்லை.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

தீவிரவாதத்தைத் தடுக்க மத்திய அரசுடன் தமிழக அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்துகூட தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை இலங்கை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக ஏற்கனவே டிடிவி தினகரன் கூறினார். ஆனால் தற்போது அவரது கட்சியில் இருந்து சாரைசாரையாக தாய்க் கழகத்தில் தொண்டர்கள் இணைந்து வருகிறார்கள்.

அணையில் போதுமான தண்ணீர் இல்லை கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. மேட்டூர் அணைக்கு இந்த முறையும் அதிக தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டிய பிறகு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். சேலத்தில் சட்டக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. அந்த கல்லூரி இந்த கல்வியாண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details