முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) கடந்த சில நாள்களுக்கு முன்பு, உடல்நலப் பிரச்னையால், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை (அக்.13) 1.30 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது உடல் நெடுங்குளம் ஊராட்சி அருகே சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள முதலமைச்சர் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த எடப்பாடி பழனிசாமி தனி விமானத்தில் சேலம் சென்றார். சேலம் விமான நிலையத்திலிருந்து சிலுவம்பாளையம் சென்ற அவர், தாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண்ணீர் மல்க கதறி அழும் காட்சி உடனிருந்தவர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இன்று 9.30 மணி அளவில் சிலுவம்பாளையம் இடுகாட்டில் முதலமைச்சரின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.