சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் திருப்பூர் மாவட்டம் பெரியநல்லூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (26) என்பவர் கடந்த 21 ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று (பிப்.24) காலை உணவு வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்ற சரவணன், தங்கியிருந்த அறையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், உடனடியாக பள்ளப்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சரவணன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.